கோவை மகா சங்கரா மினி ஹாலில் காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா
ADDED :132 days ago
கோவை; கோவை, வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் உள்ள மகா சங்கரா மினி ஹாலில் காஞ்சி மகா பெரியவரின் 132வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக காலை 7 மணியளவில் கோ பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து ஆவஹந்தி ஹோமம், சங்கல்பம் மற்றும் மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. காலை 10:30 மணியளவில் ஈரோடு ராஜாமணி பாகவதர் குழுவினரின் குரு நாம சங்கீர்த்தனம் நடந்தது. தொடர்ந்து உபநிஷத் பாராயணம், மகாதீபாரனை நடைபெற்றது. விழா நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த மகா பெரியவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.