காஞ்சி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 132 வது ஜெயந்தி விழா
ADDED :136 days ago
விழுப்புரம்; விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 132 வது ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சி காமகோடி மடத்தில் 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சுவாமிகளின் 132 வது பிறந்த நாளை ஒட்டி விழுப்புரம் சங்கர மடத்தில் சிறப்பு ஹோமங்களை வேத விற்பன்னர்கள் செய்தனர். தொடர்ந்து சங்கர மடத்தில் உள்ள அவரது சிலைக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.