திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரிகார பூஜை
ADDED :200 days ago
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐந்தாம் பிரகாரத்தில் இரு நபர்கள் அசைவ உணவு சாப்பிட்டதை தொடர்ந்து, இன்று கோவிலில் பரிகார பூஜை சிறப்பு யாகம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். நேற்று மதியம், 1:00 மணியளவில், ஆண், பெண் என இருவர், ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து முட்டை, இறைச்சியுடன் பிரியாணி சாப்பிட்டனர். அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அளித்த தகவலில், அவர்கள் இருவரையும் கோவில் ஊழியர்கள் பிடித்து, திருவண்ணாமலை டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர். இதனையடுத்து இன்று கோவிலில் பரிகார பூஜை சிறப்பு யாகம் நடந்தது. யாகம் பூஜை தீர்த்தத்தை கோவில் முழுதும் தெளித்து பரிகாரம் செய்தனர்.