திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி
ADDED :200 days ago
திருவாடானை; திருவாடானையில் சிநேகவல்லி உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடந்த விழாவில் இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. ஆயிர வைசிய மஞ்சபத்துார் மகாசபைக்கு சொந்தமான சப்தார்ண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளல் நடந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை செய்தனர்.