தேனுார் ஆற்றில் இறங்கிய அழகர்; பக்தர்கள் பரவச தரிசனம்
ADDED :200 days ago
சோழவந்தான்; சோழவந்தான் அருகே தேனுாரில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி திருவிழா மே 27ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்தாண்டு புதிதாக வைகை நதி உற்ஸவ மண்டபம் கட்டி ஜூன் 8ல் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முக்கிய நிகழ்வாக சுந்தரராஜ பெருமாள் அழகர் வேடமிட்டு புறப்பாடாகி முக்கிய வீதிகளில் சென்று ஆற்றில் இறங்கினார். தேனுாரில் அழகர் ஆற்றில் இறங்கிய வரலாறை நினைவூட்டும் வகையில் விழா நடக்கிறது. கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.