/
கோயில்கள் செய்திகள் / பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஸ்நான பூர்ணிமா; ஜெகன்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்திரைக்கு சிறப்பு அபிஷேகம்
பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஸ்நான பூர்ணிமா; ஜெகன்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்திரைக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :188 days ago
ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயிலில் வருடாந்திர ரத உற்சவம் வரும் 27ம் தேதி துவங்குகிறது. அதற்கு முன் நடைபெறும் தேவ் ஸ்நான் எனப்படும் (ஸ்நான பூர்ணிமா) தேவ குளியல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ஜெகன்நாதர், பலபத்ரர், சுபத்திரைக்கு சிறப்பு நீராட்டு விழா நடந்தது. ரத உற்சவத்திற்கு முன் கொண்டாடப்படும் ஸ்நான பூர்ணிமாவை ஒட்டி நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வை குறிக்கும் வகையில் பூரி கடற்கரையில் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் கை வண்ணத்தில் மணலால் ஆன வண்ணமிகு ஜெகன்நாதர், பலபத்ரர், சுபத்திரை உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. பூரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம் வரும் 27ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது.