உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் வழிபாடு

விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் வழிபாடு

விழுப்புரம்; விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் பிரமோற்சவ விழாவில் தேரோட்டம் நடந்தது.


விழுப்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஜனகவல்லி நாயகி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், இந்தாண்டு பிரமோற்சவ விழா கடந்த 3ம் தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன், கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, தினசரி காலை, மாலையில் மூலவர் வைகுண்டவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், இரவு பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா, பஜனை நடந்து வந்தது. 9ம் தேதி, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதனையடுத்து, பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 6.45 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்டவாச பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில், திருத்தேரில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, கோவிந்தா கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். காமராஜர் வீதி, மேலத்தெரு, வடக்கு தெரு வழியாக சென்றது. மாலை 5.30 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனமும், தீர்த்தவாரியும், மகா தீபாராதனையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !