மாளியக்காடு கிராம கோவிலில் 5 அடி உயர அரிவாள் பிரதிஷ்டை
ADDED :129 days ago
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மாளியக்காடு கிராமத்தில், மதுரை வீரன், பொம்மியம்மன் என்ற கிராம கோவில் உள்ளது. இக்கோவிலில் அமைப்பதற்காக பக்தர் ஒருவரின் உபயமாக சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கொல்லர் சந்திரசேகரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தயாரித்த, சுமார் 35 அடி உயரமும், 1 டன் எடையும் கொண்ட மெகா சைஸ் அரிவாள் ஜூன் 8ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் மதிப்பு 2.50 லட்சம் ரூபாய். நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மெகா சைஸ் அரிவாளுக்கு தீபாராதனை காட்டினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.