கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை; விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :321 days ago
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர், தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள கைலாச விநாயகர், பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி, தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர், பாரதிநகர் கற்பகவிநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.