மண்மலை கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :195 days ago
கச்சிராயபாளையம்; மண்மலை கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கச்சிராயபாளையம் அடுத்த மண்மலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கருப்பனார், அங்காளம்மன், விநாயகர் கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, கலச ஸ்தாபனம், சாமி சிலைகள் பிரதிஷ்டையுடன் விழா துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 4 மணி அளவில் மண்டல பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை நடத்தப்பட்டு நாடி சந்தானம், தத்துவார்சனை, சுவாமி சிலைகளுக்கு காப்பு கட்டுதல் மற்றும் இரண்டாம் கால பூஜையுடன் மகா பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை செய்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.