உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை

சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை

திருபுவனை; திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பம் சன்னியாசிக்குப்பத்தில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் மற்றும் சப்தமாதாக்கள் திருக்கோவிலில் வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. புதுச்சேரி சன்னியாசிக்குப்பத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற சந்திரமவுலீஸ்வரர் மற்றும் சப்தமாதாக்கள் திருக்கோவிலில் சப்தமாதாக்களில் ஒருவரான வராகி அம்மனுக்கு வளர்பிறையில் வரக்கூடிய பஞ்சமி மற்றும் தேய்பிறையில் வரக்கூடிய பஞ்சமி பூஜையும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நேற்று தேய்பிறை சிறப்பு பூஜை நடந்தது. காலை 9;00 மணிக்கு மேல் வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து வராகி அம்மன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை தரிசித்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !