உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் செப்டம்பர் மாத டிக்கெட் ஆன்லைன் பதிவிற்கான விவரம் வெளியீடு

திருப்பதியில் செப்டம்பர் மாத டிக்கெட் ஆன்லைன் பதிவிற்கான விவரம் வெளியீடு

திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தான செப்டம்பர் மாத ஆன்லைன் பதிவு, அர்ச்சனைகள் மற்றும் தங்குமிடங்களின் ஆன்லைன் கோட்டா வெளியாகும் தேதியை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.


செப்டம்பர் மாதத்திற்கான அர்ச்சனைகள் மற்றும் தங்குமிடங்களின் ஆன்லைன் கோட்டா விபரங்கள் கீழ்வருமாறு:


ஜூன் 18 காலை 10 மணி: செப்டம்பர் மாதத்திற்கான ஸ்ரீவரி அர்ஜித சேவா டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.


ஜூன் 20 காலை 10 மணி வரை: இந்த சேவா டிக்கெட்டுகளுக்கான எலக்ட்ரானிக் டிப் பதிவு செய்யலாம். 


ஜூன் 20 முதல் 22 மதியம் 12 மணி வரை: லக்கி டிப் மூலம் தேர்வானவர்கள் டிக்கெட்டுகளை உறுதி செய்ய கட்டணம் செலுத்த வேண்டும்.


ஜூன் 21 காலை 10 மணி: கல்யாணோற்சவம், உஞ்சல் சேவை, அர்ஜித ப்ரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.


ஜூன் 21 மதியம் 3 மணி: செப்டம்பர் மாதத்திற்கான வர்ச்சுவல் சேவாக்கள் மற்றும் அதற்குரிய தரிசன ஸ்லாட்டுகள் வெளியிடப்படும்.


ஜூன் 23 காலை 10 மணி: அங்கபிரதக்ஷிணா டோக்கன்கள் வெளியீடு.


ஜூன் 23 காலை 11 மணி: ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் வெளியிடப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசன கோட்டா ஜூன் 23 மதியம் 3 மணிக்கு வெளியிடப்படும்.


ஜூன் 24 காலை 10 மணி: சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !