அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :129 days ago
ஓசூர்; ஓசூர் அருகே, மோரனப்பள்ளியில், ராகு, கேது அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இங்கு, ஆனி மாத அமாவாசையையொட்டி நேற்று காலை, மூலவர் அம்மனுக்கு பூஜை நடந்தது. சந்தனம், குங்குமம், மஞ்சள், இளநீர், திருநீறு, பஞ்சாமிர்தம், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவித்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. ஓசூர் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.