மேல்மங்கலம் பட்டாளம்மன் முத்தையா கோயில் கும்பாபிஷேகம்
ADDED :199 days ago
தேவதானப்பட்டி; மேல்மங்கலம் பட்டாளம்மன் முத்தையா கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் அருகே மேல்மங்கலம் முத்தையா கோயில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி பொங்கல் திருவிழா கோலாகலமாக நடக்கும். 44 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக இரு தினங்கள்யாகசாலை பூஜையும், இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மங்கள இசையுடன், விக்னேஷ்வர பூஜையை தொடர்ந்து, பட்டாளம்மன், ஆவுடையம்மன், முத்தையா கோயில் மற்றும் பரிவார தெய்வங்கள், கோபுரங்களுக்கு அர்ச்சகர்கள் புனிதநீர் ஊற்றிகும்பாபிஷேகம் நடத்தினர். செயல் அலுவலர் வேலுச்சாமி, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.