ராமநாதபுரம் கோதண்ட ராமர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா
ADDED :139 days ago
ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் உள்ள கோதண்ட ராமர் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ விழா ஜூன் 26 ல் துவங்கி ஜூலை 6 வரை நடக்கிறது. ராமநாதபுரம் சமஸ்தானத்தை சேர்ந்த கோதண்ட ராமர் கோயில் பிரம்மோற்ஸவ விழாவில் இன்று காலை மூலவலர், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனையுடன் கொடியேற்றம் நடந்தது. தோளுக்கினியான் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதே போல் சிம்மம், கருடன், சேஷ வாகனங்களில் தினமும் இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 2 ல் இரவு திருக்கல்யாணமும், ஜூலை 5ல் ரதோற்ஸவம் காலையில் நடக்கிறது. ஜூலை 6 ல் தீர்த்தோற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது.