அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் குருக்களுக்கு ஆலயகிரியா சேவா ரத்னா பட்டம்
ADDED :140 days ago
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் குருக்களுக்கு சேவா ரத்னா பட்டம் வழங்கப்பட்டது. கூனம்பட்டி ஸ்ரீ கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீ மாணிக்கவாசகர் மடாலயத்தில் ஸ்ரீ மாணிக்கவாசக ஸ்வாமி குருபூஜை பெருவிழா நடைபெற்றது. அதில் அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் தியாகராஜ குருக்களுக்கு, ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் ஆலயக்ரியா சேவா ரத்னா பட்டம் வழங்கினார்.