கோவை சித்தி விநாயகர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு திருமஞ்சனம்
ADDED :463 days ago
கோவை; ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமி தாயாருக்கும் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் நடராஜர் சிவகாமி தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.