காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோவிலில் மங்களசண்டி ஹோமம்
ADDED :111 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேஸ்ரி காளிகாம்பாள் கோவிலில், வாராஹி நவராத்திரியையொட்டி, மங்கள சண்டி ஹோமம் நேற்று துவங்கியது. காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில், உலக நன்மைக்காகவும், சாபம், பித்ரு தோஷம் நீங்கவும், மன உளைச்சல் அகன்று, ஆரோக்கியமாக வாழ்க்கை வேண்டி வாராஹி நவராத்திரியையொட்டி, மூன்று நாட்கள் நடைபெறும் மங்கள சண்டி ஹோமம் நேற்றுகாலை 7:30 மணிக்கு துவங்கியது. பிற்பகல் 12:30 மணி வரை நடந்த ஹோமத்திற்கான ஏற்பாட்டை அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர் குழுவினர், கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். மூன்று நாட்கள் நடைபெறும் மங்கள சண்டி ஹோமம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.