புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜை
ADDED :256 days ago
திட்டக்குடி; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி யொட்டி நேற்று காலை மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. முன் மண்டபத்தில் சக்கரத்தாழ்வாருக்கு மகா சுதர்சன ேஹாமம், லட்சார்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.