முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் வருடாந்திர உற்சவம்
ADDED :206 days ago
விருத்தாசலம்; முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் 15வது வருட வருடாந்திர உற்சவம் நடந்து வருகிறது. விருத்தாசலம் அடுத்த முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் 15வது வருட வருடாந்திர உற்சவ விழா கடந்த 1ம் தேதி துவங்கியது. கடந்த 4ம் தேதி காலை சகஸ்ரநாம பாராயணம், மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 175வது மாஹா சுதர்சன ஹோமம், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை விஷ்ணு சகஸரநாம பாராயணம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (7ம் தேதி) காலை 9:00 மணிக்கு மஹா சுதர்சன ஹோமம், மாலை 7:00 மணிக்கு சுவாமி வீதியுலாவுடன் வருடாந்திர உற்சவம் நிறைவடைகிறது.