பாண்டுரங்க ருக்மணி தியான மந்திரில் ஆஷாட ஏகாதசி விழா
ADDED :107 days ago
கோவை; சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனி ஸ்ரீ பாண்டுரங்க ருக்மணி தியான மந்திரில் ஆஷாட ஏகாதசி விழா நடைபெற்றது. இதில் பாண்டுரங்க ருக்மணி தாயாருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பாண்டுரங்கன் ருக்மணி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் ஸ்ரீ பஜன் மண்டலி காம்யா ஸ்ரீ பரசுராம் குழுவினரின் நாம சங்கீத் தனம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.