வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் பாலாலயம்
ADDED :109 days ago
வில்லிவாக்கம்; அகத்தீஸ்வரர் கோவிலில் சீரமைப்பு பணிக்காக, நேற்று பாலாலயம் நடந்தது. வில்லிவாக்கத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 2.15 கோடி ரூபாயில், கல்லகார மொட்டை கோபுரத்தின் மீது, புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டுவது உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அம்பாள் சன்னிதி மேல் தளத்தில் தரை சேதமடைந்துள்ளதால் அவற்றை சீரமைக்கும் பணிக்கு, விமான பாலாலயம் நேற்று நடந்தது. கோவிலின் செயல் அலுவலர் குமரேசன் கூறுகையில், ‘‘அகத்தீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி, 75 சதவீதம் நிறைவடைந்தது. அதேபோல், கருங்கல் தரைத்தளம், சன்னிதி மேல் தளம், நாகத்தம்மன் அரசமரம், கொடி மரம் சீரமைப்பு பணி நடந்து வருகிறது,’’ என்றார்.