உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம்; யாக பூஜை

பழநி பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம்; யாக பூஜை

பழநி; பழநி, கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது. பழநி, கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் நேற்று சாயரட்சை பூஜையில் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயில் பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டது. இதில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன் விஷ்ணு, நரேஷ்குமரன், கோயில் உதவி கமிஷனர் லட்சுமி, கண்காணிப்பாளர் அழகர்சாமி, முன்னாள் கண்காணிப்பாளர் முருகேசன் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !