காஞ்சிபுரம் கோவில்களில் சத்தீஸ்கர் அமைச்சர் சுவாமி தரிசனம்
ADDED :186 days ago
காஞ்சிபுரம்; சத்தீஸ்கர் மாநில வனத்துறை அமைச்சர் கேதர் காஷ்யப், காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். சத்தீஸ்கர் மாநில வனத்துறை அமைச்சர் கேதர் காஷ்யப், தன் குடும்பத்தினருடன் நேற்று காஞ்சிபுரம் வந்தார். காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில்களில், குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சங்கர மடத்தின் மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன், ஸ்தானீகர்கள், சத்தீஸ்கர் அமைச்சருக்கு கோவில் பிரசாதம் மற்றும் காமாட்சி அம்மன் உருவப்படம் வழங்கினர்.