நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் ஸ்ரீநடராஜர் – சிவகாமசுந்தரி தரிசனம்
ADDED :104 days ago
திருப்பூர்; நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவின் ஒரு பகுதியாக, ஸ்ரீநடராஜர் – சிவகாமசுந்தரி அம்மன் தரிசனம் நேற்று நடந்தது.
நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், புதிய தேர் வடிவமைக்கப்பட்டு, முதன்முதலாக தேர்த்திருவிழா நடந்தது. கடந்த, 10ம் தேதி தேரோட்டமும், 11ம் தேதி பரிவேட்டை, 12ம் தேதி தெப்போற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, ஸ்ரீநடராஜர் தரிசன காட்சி நடந்தது. ஸ்ரீநடராஜர் – சிவகாமசுந்தரி அம்மனுக்கு, காலை, 16 வகையான திரவியங்களால் மஹா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது. முன்னதாக, பிச்சாடனர் கோலத்தில் சிவபெருமான் யாசகம் பெற, திருவீதியுலா சென்றுவந்தார். தேர்த்திருவிழா நிறைவாக, திருப்பூர் கவிநயா நாட்டியாலயா பரத நாட்டிய பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவியரின், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நாட்டிய நாடக நிகழ்ச்சி நடந்தது.