மருதூர் அனுமந்தராய சுவாமிக்கு சிறப்பு சிறப்பு திருமஞ்சனம்
ADDED :175 days ago
கோவை; காரமடை அடுத்துள்ள மருதூர் அனுமந்தராய சுவாமி திருக்கோவிலில் ஆடி மாதம் ஆறாம் நாளில் ஒவ்வொரு வருடமும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். இந்த வருடம் பால் தயிர் தேன் இளநீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து 1008 வடைமாலை சாற்றிய திருமேனியனாய் அனுமன் பக்தர்களுக்கு அபயம் அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.