வடலூர் சத்திய ஞான சபையில் ஆடி பூசம் நட்சத்திர ஜோதி தரிசனம்
ADDED :177 days ago
வடலூர்; வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தில், 6 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். நேற்று ஆடி மாத பூசம் நட்சத்திரத்தை ஒட்டி, மாத பூசம் தினத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சன்மார்க்க அன்பர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் கண்டு வழிபட்டனர். சன்மார்க்க அன்பர்கள் சார்பில் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.