அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி சனி சிறப்பு அபிஷேகம்
ADDED :95 days ago
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
கோவை, உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சந்தனம் மற்றும் பன்னீர் அபிஷேகம் நடந்தது. .இதில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கரி வரதராஜபெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.