மருங்கூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :65 days ago
விருத்தாசலம்; மருங்கூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மருங்கூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 7ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை கழுமரம் ஏறுதல், அரவாண் களபலி நிகழ்ச்சி நடந்தது. மாலை தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.