அள்ளூர் கட்டுக்கரை முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி
ADDED :121 days ago
சேத்தியாத்தோப்பு; அள்ளூர் கட்டுக்கரை முத்துமாரியம்மன் கோவிலில் 15ம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் கட்டுக்கரையில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 15ம் ஆண்டு விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 20ம் தேதி திருவிளக்கு பூஜை, 24ம் தேதி பால்குட ஊர்வலம், 25ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. 27ம் தேதி இரவு காத்தவராயன் கழுமரம் ஏறுதல் நடந்தது. நேற்று மாலை வெள்ளாற்றங்கரையில் இருந்து காப்பு கட்டிக் கொண்டவர்கள் சக்தி கரகத்துடன் ஊர்வலமாக வந்து, தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.