உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்யசாயி சேவா நிறுவனம் சார்பில் திருவிளக்கு பூஜை வழிபாடு

சத்யசாயி சேவா நிறுவனம் சார்பில் திருவிளக்கு பூஜை வழிபாடு

திருப்பூர்; சத்யசாயி சேவா நிறுவனம் சார்பில், திருவிளக்கு பூஜை வழிபாடு பல்லடத்தில் நேற்று நடந்தது.சத்யசாயி பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் சத்யசாயி சேவா நிறுவனம், மாவட்டம் முழுவதும் திருவிழாக்கு பூஜை வழிபாட்டை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பல்லடம் பொங்காளி அம்மன் கோவிலில் நேற்று, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக, மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்டவற்றால் திருவிளக்கிற்கு பூஜை நடந்தது. இதனையடுத்து, திருவிளக்கு ஏற்றப்பட்டு, லலிதா சகஸ்ரநாமம் பாராயணமும், 108 அர்ச்சனையும் நடந்தது. இந்த வழிபாட்டில், 81 பெண்கள், தாய்மார்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பொங்காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பொங்காளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் திருவிழாக்கு பூஜையில், இது, 30வது வழிபாடாகும் என, சத்யாசாயி சேவா நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !