உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் கருட பஞ்சமி விழா; கருட சேவை தரிசித்து பக்தர்கள் பரவசம்

திருமலையில் கருட பஞ்சமி விழா; கருட சேவை தரிசித்து பக்தர்கள் பரவசம்

திருப்பதி; திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி தனது விருப்பமான வாகனமான கருடனில் திருமட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார். கருட வாகன சேவை நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. ஸ்ரீவாரியின் வாகனங்கள் மற்றும் ஊழியர்களில் கருடன் மிக முக்கியமானவர். ஒவ்வொரு ஆண்டும், சுக்ல பக்ஷத்தின் ஐந்தாம் நாளில் கருட பஞ்சமி கொண்டாடப்படுகிறது. நேற்று நடைபெற்ற விழாவில் புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவும், பெண்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வலிமையாகவும் கருடனைப் போலவும் இருக்கவும் "கருட பஞ்சமி" பூஜை செய்து வழிபட்டனர். விழாவில் கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சவுத்ரி, முரளிகிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகள் கருட வாகன பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !