அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி சனி சிறப்பு வழிபாடு
ADDED :238 days ago
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் மூலவர் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள், தாயாரை தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு ஸ்ரீ பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் காவிநிற வஸ்திரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.