மல்லனம்பட்டி மகாலட்சுமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ADDED :63 days ago
வத்தலக்குண்டு; மல்லனம்பட்டி அழகாபுரி மகாலட்சுமி கோவில் ஆடிப்பெருக்கு திருவிழா நடந்தது. நள்ளிரவில் நடக்கும் இந்த திருவிழாவில் ஊர் கிணற்றின் அருகே கரகம் ஜோடித்து அபிஷேகங்கள் நடந்தது. உறுமி மேளம் முழங்க, கோவிந்தா கோஷத்துடன் மடியில் தேங்காய்களை கட்டிக் கொண்டு வந்த பூசாரி பக்தரின் தலையில் தேங்காய் உடைத்தார். இதனை தொடர்ந்து மகாலட்சுமி அம்மன் சிலை மின் அலங்கார தேரில் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஏராளமான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.