உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறிவாளில் ஏறி நின்று அருள்வாக்கு சொல்லிய கருப்பணசாமி

அறிவாளில் ஏறி நின்று அருள்வாக்கு சொல்லிய கருப்பணசாமி

வத்தலக்குண்டு; காந்திநகரில் சோணை கருப்பணசாமி, வீரசின்னம்மாள் கோவில் ஆடி பெருக்கு திருவிழா நடந்தது. மஞ்சளாற்றில் கரகம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சோணை கருப்பணசாமி கோயிலில் பக்தர்களால் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆடிவந்த கருப்பண்ணசாமி ஓடி வந்து அரிவாளில் மீது ஏறி நின்று அருள்வாக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !