உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிளேக் மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்

பிளேக் மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே ஆடி வெள்ளி, பவுர்ணமியை முன்னிட்டு பிளேக் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவை மாவட்டம் காரமடை ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ், அண்ணா நகரில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆடி வெள்ளி மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு, பிளேக் மாரியம்மனுக்கு மலர் அலங்கார பூஜை நடந்தது. பின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடினர். பின், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் தர்மராஜ் செய்திருந்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !