காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் வரலட்சுமி விரத பூஜை
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் வரலட்சுமி விரத பூஜை சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்காரம் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக, பிரம்மா கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வரலக்ஷ்மி விரதப் பூஜை மண்டலத்தில் எழுந்தருளினார். கோயில் வேதப் பண்டிதர்கள் அம்மனுக்கு முன்பாக சிறப்பு கலசம் ஏற்பாடு செய்தனர். கலசத்தை சிறப்பு அலங்காரம் செய்து வேத மந்திரம் செய்யப்பட்டது. வரலக்ஷ்மி விரதப் பூஜை மண்டபத்திற்கு வந்த ஏராளமான பெண் பக்தர்கள் இந்த நோன்பு பூஜையில் கலந்து கொண்டனர். பூஜை மண்டலத்தில் பெண் பக்தர்கள் வரிசையாக அமர்ந்து தங்கள் முன்பு அவரவர் கொண்டு வந்த பூஜை பொருட்களை கொண்டு வரலக்ஷ்மி விரதப் பூஜையை சிரத்தையுடன் செய்தனர். கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, நோன்புக் கயிறுகளை கட்டிக் கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட பெண் பக்தர்களுக்கு சிவன் கோயில் சார்பில் தாம்பூலம் ( மஞ்சள், குங்குமம், வெற்றிலை - பாக்கு, மற்றும் மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது.