திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஸ்பெயின் பக்தர்கள் தரிசனம்
ADDED :170 days ago
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சிவ பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் பிரகாரத்தை சுற்றி வந்த பக்தர்கள் நமச்சிவாய வாழ்க என்ற கோஷத்துடன் தியானத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவிலின் பழமை மற்றும் சிறப்புகளை கோவில் அர்ச்சகரிடம் கேட்றிந்து பரவசம் அடைந்தனர்.