பரமதிருப்தி தரும் பரமசுந்தரர்
ADDED :4718 days ago
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ள கிராமத்தின் பெயர் வாழ்க்கை... இந்த ஊராட்சி பகுதியில் புத்தகளூர் என்ற குக்கிராமம் உள்ளது. இங்குள்ள பரமசுந்தரர் கோயில் நாகதோஷம் போக்கும் தலமாக விளங்குகிறது. முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் சிதிலமடைந்து விட்டது. புத்தகை என்னும் முனிவர், இவ்வூரில் பல காலம் சிவனை நினைத்து தவமிருந்தார். அவரைச் சுற்றி பெரிய புற்று வளர்ந்தது. அவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவன் காட்சியளித்து அருள்புரிந்தார். முனிவரின் பெயரால் புத்தகை எனப்பட்ட இவ்வூர், புத்தகளூராக மாறியது. சுவாமி பரமசுந்தரராகவும், அம்பிகை பரமேஸ்வரியாகவும் வீற்றிருக்கின்றனர். தட்சிணாமூர்த்தி சிலையின் பின்புறம் கல்வெட்டு உள்ளது. கோயில் திருப்பணி நடக்கிறது. இதில் பங்கேற்றால் வாழ்வில் பரமதிருப்தி உண்டாகும். போன்: 98400 53289.