ராமநாதபுரம் வல்லபை விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்
ADDED :101 days ago
ராமநாதபுரம்; ராமநாதபுரம் சந்தைப்பேட்டை அருகே உள்ள வல்லபை விநாயகர் கோயிலின் 60ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று காப்புக்கட்டி துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் நிகழ்வில் வெவ்வேறு அலங்காரத்தில் விநாயகர் காட்சியளிப்பார். தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம் பூஜைகள், இரவு இசை நிகழ்ச்சி நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆக.22ல் மாலையில் திருவிளக்கு பூஜை நடக்கவுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று ஆக.27ல் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.