மன்னார்குடி அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவிலில் மண்டல பூஜை
ADDED :49 days ago
மன்னார்குடி; மன்னார்குடி நெடுவகோட்டை அருகே உள்ள அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது.
அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மண்டல பூஜை நடைபெற்றது. மூலவர் அகஸ்தீஸ்வரர் சுவாமிக்கு மங்களப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். அதேபோல யாகசாலையில் குண்டங்கள் அமைத்து அதில் ஹோம பூஜை நடத்தப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு விநாயகர்,முருகன்,மகாலட்சுமி, காளியம்மன், நவகிரகங்கள், சூரிய, சந்திரன்,மூலவர் அகஸ்தீஸ்வரர்,மூலவர் காமாட்சி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.