ஆவணி முதல் செவ்வாய்; அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :100 days ago
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் -தென்னம்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி மாதம் முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.