கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :407 days ago
கோவை; ஆவணி துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆவணி மாதம் முதல் புதன் கிழமையை முன்னிட்டு கோவை, சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் லஷ்மி நாராயண பெருமாளுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் துளசி மாலை அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.