மூரண்டம்மன் கோவிலில் ஆவணி அமாவாசை சிறப்பு அபிஷேகம்
ADDED :416 days ago
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன் கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மஞ்சள் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூரண்டம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.