சதுர்த்தி விழா 4ம் நாள்; மயில் வாகனத்தில் உப்பூர் விநாயகர் வீதி உலா
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், விநாயகர் வீதி ஊர்வலம் நடைபெற்றது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கிறது. சதுர்த்தி விழாவின் மண்டகப்படி நிகழ்வுகளாக, தினமும் மாலையில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. சதுர்த்தி விழாவின் துவக்க நாளில், வெள்ளி மூஷிக வாகனத்திலும், 2ம் நாளில் கேடகம் வாகனத்திலும், 3ம் நாளில் சிம்ம வாகனத்திலும், விநாயகர் வீதி ஊர்வலம் நடந்தது. இந்த நிலையில், 4ம் நாள் ஊர்வலமாக, மயில் வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த விநாயகருக்கு பக்தர்கள், அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். முன்னதாக, மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.