உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கம்பீர விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்

கோவை கம்பீர விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்

கோவை; சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கம்பீர விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (25ம் தேதி) கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் கம்பீர விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, சிறப்பு பூஜை ஆகியன நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு கணபதி மூல மந்திர ஜெபம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து மூலவர் விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம், தீபாரதனை ஆகியன நடைபெறும். நாளை இரண்டாம் நாள் காலை 6 மணிக்கு கணபதி மூல மந்திர ஜெபம் அதை தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம். மாலை 7 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். விநாயகர் சதுர்த்தியான புதன்கிழமை அன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், கணபதி மூல மந்திர ஜபம் ஆகியன நடைபெறும். தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக பூஜை நடைபெறும். காலை 08.30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை 12 மணியளவில் அருகம்புல் அர்ச்சனை நடைபெறும்.மாலை 5 மணியளவில் விநாயகர் ஊர்வலம் நடைபெறும் ஊர் சுவர் கம்பீர விநாயகர் மூஷிக வாகனத்தில் திரு வீதியுலா வருகிறார்.தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !