பழநி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
                              ADDED :67 days ago 
                            
                          
                          
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு வருகை புரிந்தனர். வெளிமாநில, மாவட்ட வருகை புரிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப்,வின்சில் பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். நடந்து சென்ற பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியாக படிப்பாதையில் கோயிலுக்கு சென்றனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது.