உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் மண்டலாபிஷேகம்: தீபஒளியில் சுவாமி அருள்பாலிப்பு

மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் மண்டலாபிஷேகம்: தீபஒளியில் சுவாமி அருள்பாலிப்பு

கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தன. மண்டல பூஜையின் நிறைவு நாளான 48 ஆம் நாள் மூலவர் தர்மலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது .இதில் தீப ஒளியுடன் சர்வ புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சிவபெருமான். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளை பெற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !