உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் திரும்பிய பெருமாளுக்கு வரவேற்பு விழா

திருப்பரங்குன்றம் திரும்பிய பெருமாளுக்கு வரவேற்பு விழா

திருநகர்;திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் 106 வது பிரம்மோற்ஸவ விழா ஆக. 8ல் துவங்கியது. அன்று நவநீத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை முடிந்து பல்லக்கில் புறப்பாடாகி திருப்புவனம், மானாமதுரை வழியாக கட்டிக்குளம் சென்றடைந்தார். அங்கு பூஜை விழா முடிந்து திருப்பரங்குன்றம் திரும்பினார். வழியில் நேற்று விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் நவநீத பெருமாள் எழுந்தருளினார். கோயில் நிர்வாகிகள் சார்பில் பெருமாளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, கோயில் மூலவர்கள் உற்சவர்கள் நவநீத பெருமாளுக்கு பூஜை, தீபாராதனை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு நவநீத பெருமாள் புறப்படாகி மூலக்கரை சென்றார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !