பைப் லைன் தோண்டும் போது 2 அடி உயரமுள்ள அம்மன் சிலை கண்டெடுப்பு
ADDED :113 days ago
நாமக்கல்; பைப் லைன் தோண்டும்போது இரண்டரை அடி உயரமுள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், வையப்பமலை அருகே, மின்னாம்பள்ளி கிராமத்தில், பைப் லைன் தோண்டும்போது இரண்டரை அடி உயரமுள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையை வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றி திருச்செங்கோடு தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். கண்டெடுக்கப்பட்ட சிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.